Aadhaar வழங்கும் அமைப்பான UIDAI, இன்று புதிய ஆதார் ஆப்யின் ‘ Full version’ அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் உங்களின் அனைத்து வேலைகளும் எளிதாக செய்யலாம். புதிய ஆதார் ஆப் முதன்முதலில் நவம்பர் 2025 யில் அறிமுகப்படுத்தப்பட்டது, இன்று புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், அதன் புல் வெர்ஷன் இப்போது இந்திய குடிமக்களுக்குக் கிடைக்கிறது. இந்த செயலி உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் அப்டேட் செய்ய உங்களை அனுமதிக்கிறது. ஆஃப்லைன் ஆதார் வெரிபிகேஷன் அம்சம்மற்றொரு அம்சம் அதன் ஆஃப்லைன் ஆதார் வெரிபிகேஷன் அம்சமாகும், இது இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் நம்பரை பகிராமலேயே தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த அனுமதிக்கிறது. குடிமக்கள் ஆதார் ஆப் மூலம் பயோமெட்ரிக் லோக்களை பயன்படுத்தலாம், ஆனால் உங்கள் போன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, உங்கள் ஆதார் அக்கவுன்டிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.